×

அக்னிபாதை திட்டத்தை கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: அக்னி பாதை திட்டத்தை கைவிடக்கோரி திருவள்ளூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாதை திட்டத்தை உடனடியாக கைவிட கோரியும், ஒப்பந்த ராணுவ வீரர்கள் முறையை புகுத்துவதை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டக்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ், மாவட்ட செயலாளர் கோபால், முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு, பா.சுந்தரராஜன், தமிழரசு, மோகனா ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் அக்னிபாதை திட்டத்தை கைவிடக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

பொன்னேரி: பொன்னேரி அம்பேத்கர் சிலை அருகே அக்னிபாதை திட்டத்தை கைவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களின் வாழ்க்கையை சூறையாடும் அக்னிபாதை திட்டத்தை கைவிட கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் பிரதமர் மோடியின் உருவப்படத்தையும், திட்ட நகல்களையும் போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். அதனை தடுக்க முயன்றபோது காவல்துறையினருக்கும், இளைஞர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடரந்து பொன்னேரி - திருவொற்றியூர் சாலையில் மறியலில் ஈடுபட்ட 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்து பொன்னேரியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags : Marxist ,Communist ,Agnipadu , Marxist communist protest demanding abandonment of the Agnipatha project
× RELATED வெறுப்பு பேச்சு: பிரதமர் மோடி மீது...