திருமழிசையில் புரட்சி பாரதம் கட்சி ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி எம்எல்ஏ ஆணைகிணங்க புரட்சி விதைகள் என்ற தலைப்பில் திருவள்ளூர் மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருமழிசை நகர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு நகர தலைவர் ஆர்.ஏழுமலை, நகர செயலாளர் ஜெ.பாபு ஆகியோர் தலைமை வகித்தனர். நகர பொறுப்பாளர்கள் முருகேசன், ராஜாமணி, தமிழ்புத்தா, பாலு, சாமுவேல், முருகன், ஏசு, பரமசிவம், அன்பு, ஆனந்தன், முரளி, தாஸ், பாலா முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் ஏ.ஆழ்வார் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் பிரீஸ் ஜி.பன்னீர், மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, மாவட்ட பொருளாளர் நயப்பாக்கம் டி.மோகன் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். இதில் மாநில பொறுப்பாளர்கள் டி.கே.சி.வேணுகோபால், திருமங்கலம் எம்.பி.வேதா, அ.அலேக்ஸ், மாவட்ட பொறுப்பாளர்கள் டி.ஜி.மணிமாறன், சி.வி.டி.ஏழுமலை, சி.பி.ஸ்ரீராம் மற்றும் நகர, வார்டு பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: