×

திருத்தணியில் ஜமாபந்தி நிறைவு: 304 மனுக்களுக்கு தீர்வு

திருத்தணி: திருத்தணி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 304 பயனாளிகளுக்கு ரூ.44.67 லட்சம்  மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் 1431ம் பசலிக்கான ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 7ம் தேதி வருவாய் கோட்டாட்சியர் சத்யா தலைமையில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க கோரி மனுக்கள் கொடுத்தனர். இந்நிலையில், ஜமாபந்தி நிகழ்ச்சியின் நிறைவு விழா தாசில்தார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் தாசில்தார் வெண்ணிலா வரவேற்றார். இதில் திருத்தணி எம்எல்ஏ சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் சத்யா ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

விழாவில், 58 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 50 பேருக்கு முதியோர் உதவித் தொகை, 16 விதவைகளுக்கு உதவி தொகை, 4 மாற்று திறனாளிகளுக்கு உதவி தொகை, 63 பேருக்கு உட்பிரிவு மாறுதல், 10 பேருக்கு முழுபுலம் பட்டா மாறுதல், 21 பேருக்கு கணினி திருத்தம் பட்டா மற்றும், 82 பேருக்கு சான்றுகள் என மொத்தம் 304 பேருக்கு ரூ.44 லட்சத்து 67 ஆயிரத்தி 100 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கதிர்வேல், தனி தாசில்தார் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மணிவாசகம், துணை தாசில்தார்கள் ரீட்டா, தமிழ்செல்வி, சாமுண்டீஸ்வரி, முரளி, வருவாய் உதவியாளர்கள் உதயகுமார், தேவராஜ், கணேசன், தாமோதரன், ராஜேந்திரன், சத்யா, வருவாய் ஆய்வாளர்கள் முகமது யாசர் அராபாத், ஸ்டீபன்ராஜ், நதியா உள்பட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Jamabandhi ,Thiruthani , Completion of Jamabandhi at Thiruthani: Settlement of 304 petitions
× RELATED திருத்தணியில் வருமான வரித்துறை சோதனை!!