அட்லாண்டிக் கடலில் அஜித்

பிரஸெல்ஸ்: அஜித் தனது நண்பர் கள் மற்றும் உறவினர்களுடன் ஐரோப்பிய நாடுகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்த அவர், தற்போது பெல்ஜியம் நாட்டில் பைக் பயணம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் அட்லாண்டிக் பெருங்கடலில் கப்பலில் அஜித் சென்றபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அவருடன் சென்ற குழுவினர்களில் ஒருவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். இதையடுத்து இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டுள்ளது. மேலும், 26 ஐரோப்பிய நாடுகளில் அஜித் பைக் பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில நாடுகளுக்கு இப்போது சென்று வந்துவிட்டு, வேறு சில நாடுகளுக்கு தான் நடித்து வரும் படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு செல்ல அவர் திட்டமிட்டு உள்ளாராம்.

Related Stories: