அரசு மருத்துவமனை ஆயுஷ் பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம்

மாமல்லபுரம்: சர்வதேச யோகா தினத்தையொட்டி, அரசு மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் ஜூன் 21ம் தேதி யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாமல்லபுரம் அரசு மருத்துவமனை ஆயுஷ் பிரிவு சார்பில், ஆயுஷ் மருத்துவர் வானதி நாச்சியார் மற்றும் மருத்துவர் குழு அமைக்கப்பட்டது. இவர்கள்,  மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் 360 மாணவ, மாணவிகளுக்கு யோகா தினதன்று பிராணயாமம், மூச்சு பயிற்சி மற்றும் யோகா பயிற்சி கற்பித்து கொடுத்தனர்.

Related Stories: