×

தொழிலாளர் மேலாண்மை டிப்ளமோ படிப்பில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:  தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டபடிப்பு, எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்ட மேற்படிப்பு மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலைநேர பட்டயப்படிப்பு), தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டய படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) படிப்புகள் சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. பி.ஜி.டி.எல்.ஏ. மற்றும் டி.எல்.எல் மற்றும் ஏ.எல் படிப்புகள் தமிழக அரசின் அங்கீகாரத்துடன் நடைபெற்று வருகிறது. பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை), பி.ஜி.டி.எல்.ஏ, மற்றும் டி.எல்.எல். மற்றும் ஏ.எல் ஆகிய பட்ட/ பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகள் தொழிலாளர் நல அலுவலர் பதவிக்கு பிரத்யேக கல்வித் தகுதியாக தமிழ்நாடு தொழிற்சாலைகள் தொழிலாளர் நல அலுவலர்கள் விதிகளில் வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு தொழிலாளர் துறையில் தொழிலாளர் உதவி ஆணையர் மற்றும் தொழிலாளர் உதவி ஆய்வர் பதவிகளுக்கு பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ (தொழிலாளர் மேலாண்மை) மற்றும் பி.ஜி.டி.எல்.ஏ. ஆகிய பட்ட, பட்டமேற்படிப்பு / பட்டய படிப்புகளை முன்னுரிமை தகுதிகளாக நிர்ணயம் செய்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிற்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் அடிப்படையில் அரசு விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்  - ரூ.200, எஸ்.சி., எஸ்.டி - ரூ.100 (சாதிச் சான்றிதழ் நகல் இணைக்கப்பட வேண்டும்) 20.6.2022 முதல் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். தபால் மூலம் விண்ணப்பங்கள் பெற விண்ணப்ப கட்டணத்திற்கான ரூ.200 (எஸ்.,எஸ்.டி - ரூ. 100) வங்கி வரைவோலையினை ‘The Director, Tamilnadu Institute of Labour Studies, Chennai ’ என்ற பெயரில் எடுத்து பதிவுத் தபால்/ விரைவு அஞ்சல்/ கொரியர் மூலம் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மதிப்பெண் மற்றும் அரசு விதிகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை) பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 4.7.2022 ஆகும். மேலும் விவரங்களுக்கு: ஒருங்கிணைப்பாளர் (சேர்க்கை) முனைவர் ரா.ரமேஷ்குமார், உதவிப் பேராசிரியர் தொலைபேசி: 9884159410, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மின்வாரிய சாலை, மங்களபுரம் (அரசு ஐ.டி.ஐ. பின்புறம்) அம்பத்தூர், சென்னை 600 098, தொலைபேசி எண்     : 044 - 29567885 / 29567886, இ-மெயில்- tilschennai@tn.gov.in தொடர்பு கொள்ளவும்.

Tags : Applications are welcome to join the Diploma in Labor Management: Government of Tamil Nadu Announcement
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...