சில்லி பாய்ன்ட்...

* மார்தா வெற்றி

இங்கிலாந்தில் நடக்கும் ஈஸ்ட்போர்ன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனை செக் குடியரசின் கிரெஜ்சிகோவா(26, 15வது ரேங்க்) நேரடியாக 2வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை மார்தா  கோடியூக்(19வயது, 79வது ரேங்க் உடன் மோதினார். நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஆளுக்கொரு செட்டை வென்றிருந்த நிலையில் மழையால் ஆட்டம் இடை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று நடந்த 3வது செட்டை மார்தா  வசப்படுத்தினார். அதனால் 2.29மணி நேரம் நீண்ட ஆட்டத்தில் மார்தா 2-1 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார். விம்பிள்டன் ஓபன் போட்டிக்கான தகுதிச் சுற்றின் முதல் ஆட்டத்திலேயே இந்திய வீரர்கள் ராம்குமார் ராமநாதன், யூகி போம்ரி ஆகியோர் தோற்று வெளியேறினர்.

* விரைவில் அணியுடன்...

இங்கிலாந்து செல்ல விமான நிலையம் சென்றபோது சுழல் அஷ்வின் கொரோனா தொற்றில் சிக்கியிருப்பது தெரிந்தது. அதனால் அவர் அணியினருடன் ஜூன் 16ம் தேதி இங்கிலாந்து செல்லவில்லை. சென்னையில் வீட்டு தனிமை மற்றும் கண்காணிப்பில்  இருக்கும் அஷ்வின் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் கொரோனா சோனைக்கு பிறகு இங்கிலாந்து புறப்பட்டுச் செல்வார் என்று புறப்பட்டு செல்வார் என்று கூறப்படுகிறது. இடையில் புறப்பட்ட பயிற்சியாளர் திராவிட், வீரர்கள் ஸ்ரேயாஸ், ரிஷப் ஆகியோர் லீசெஸ்டரில் உள்ள அணியுடன் நேற்று இணைந்தனர்.

* கேப்டனாக லாதம், சான்ட்னர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி முடிந்ததும் நியூசிலாந்து அணி ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறது. முதலில் அயர்லாந்து அணியுடன் தலா 3 ஒருநாள், டி20 தொடர்களிலும், ஸ்காட்லாந்து அணியுடன் 2 டி20, ஒரு ஒருநாள் தொடர்களிலும் விளையாடுகிறது. அடுத்து நெதர்லாந்து அணிக்கு எதிராக 2 ஒருநாள் ஆட்டங்களில் நியூசி மோதுகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இருந்து கேப்டன் கேன் வில்லியம்சன்னுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  அதனால் அயர்லாந்தில் நடைபெறும் ஒருநாள் ஆட்டங்களுக்கு மட்டும் டாம் லாதம் கேப்டனாக செயல்படுவார்கள். மற்ற தொடர்களுக்கு  மிட்செல் சான்ட்னர் கேப்டனாக இருப்பார் என்று நியூசிலாந்து கிரிக்கெட் அமைப்பு நேற்று அறிவித்துள்ளது.

* முதல் பெண் தலைவர்

கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான சர்வதேச கிரிக்கெட்காரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு(ஃஎப்ஐசிஏ) 1998ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சுவிட்சர்லாந்தில் செயல்படுகிறது. இதன் முதல் பெண் தலைவராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் லிசா ஸ்தலேகார் நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆஸ்திரேலியா அணிக்காக 8 டெஸ்ட் 125 ஒருநாள், 54டி20 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். இந்தியாவில் பிறந்த லிசா, ஆதரவற்றோர் விடுதியில்  இருந்து ஆங்கிலேயே பெற்றோர்களால் தத்தெடுக்கப்பட்டவர்.

Related Stories: