சென்னை விமான நிலையத்தில் பஞ்சாப் தீவிரவாதி கைது

சென்னை: தலைமறைவாக இருந்த பஞ்சாப் தீவிரவாதி சென்னை விமான நிலையத்தில் பிடிபட்டார். பஞ்சாப்  மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ப்ரீத்சிங் (26). இவர் மீது கடந்த 2020ம் ஆண்டு தேச துரோக வழக்கு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு எதிரான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு தேடினர். ஆனால் ஹர்ப்ரீத் சிங் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டார்.இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ஹர்ப்ரீத்சிங் வந்தார். அவரது ஆவணங்களை கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தபோது அவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த பஞ்சாப் போலீசார் சென்னை வந்து,  ஹர்ப்ரீத் சிங்கை கைது செய்து பஞ்சாப் அழைத்து சென்றனர்.

Related Stories: