×

நீரிழிவு காரணமாக விஜயகாந்த் வலது கால் விரல் அகற்றம்: நலமுடன் உள்ளார் என தேமுதிக அறிவிப்பு

சென்னை: நீரிழிவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலது காலில் உள்ள விரல் அகற்றப்பட்டுள்ளது. அவர் தற்போது நலமுடன் இருக்கிறார் என்று தேமுதிக அறிவித்துள்ளது.தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அவரது காலில் உள்ள விரல் அகற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தேமுதிக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று(நேற்று முன்தினம்) விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Tags : Vijaykanth ,Temujin , Due to diabetes Vijaykanth's right toe amputated: Temujin announces he is well
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...