குளித்தலை அரசு மருத்துவமனையில் கிடா வெட்டி பிரியாணி விருந்து: சமூக வலைதளங்களில் வைரல்

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று தலைமை மருத்துவர் பூமிநாதன் தலைமையில் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் சேர்ந்து கிடாவெட்டி மருத்துவமனை பின்புறம் உள்ள கட்டிடத்தில் சமையல் செய்து பிரியாணி விருந்து சாப்பிட்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் சமூக ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதுகுறித்து தலைமை மருத்துவ அலுவலர் பூமிநாதனிடம் கேட்டபோது, குறைவான மருத்துவர்கள், செவிலியர்கள் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகின்றனர். அடிக்கடி மனதளவில் பாதிக்கப்பட்டு வருவதால் ஒருநாள் இதுபோன்று மருத்துவர்கள், செவிலியர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக இந்த விருந்து நடத்தப்பட்டது. இந்த புகைப்படங்களை சர்ச்சையை கிளப்புவதற்காக சிலர் சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள் என தெரிவித்தார்.

Related Stories: