×

கனமழையால் கால்வாய் உடைப்பு: விவசாயிகள் வேதனை

வேலூர்: வேலூர் அருகே கனமழையால் கால்வாய் உடைந்து விளைநிலத்திற்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது.

இதனால் பொன்னை அடுத்த கடூர் கால்வாய் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்கள் முழுகின அறுவடைக்கு தயராக இருந்த பயிர்கள் நீரில் முழுகியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட நிறுவனம் உடனடியாக இதில் தலையிட்டு சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

இதை போன்று காட்பாடி தேசிய நெடுஞசாலையில் பெரிய புளியமரம் ஒன்று சாலையில் வேரோடு சாய்ந்தது. இதனால் காட்பாடி சாலையில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. மேலும் மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை அப்புரவுபடுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.


Tags : Canal breakage due to heavy rains: Farmers suffer
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!