×

விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிக அறிக்கை..!

சென்னை: விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன் அடிப்படையில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கடந்த 18ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததன் காரணமாக அறுவை சிகிச்சை செய்து 3 விரல்கள் அகற்றப்பட்டது.  தற்போது அவர் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இது தொடர்பாக தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில்; நீண்ட வருடங்களாக இருக்கும் நீரழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார்.

மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து விஜயகாந்த்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடியுந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Vijaykanth ,Temujin , Do not believe the rumors about Vijaykanth's health: Temujin report ..!
× RELATED சகோதரருக்கு செய்யக்கூடிய மரியாதைகள்...