×

கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை வழங்கினார் அமைச்சர் சேகர்பாபு.!

சென்னை: சென்னை கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு இந்து சமய  அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு  அவர்கள் வழங்கினார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை, கொளத்தூர் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 200 மாணவ மாணவியர்களுக்கு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மாண்புமிகு இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு  அவர்கள் வழங்கினார்கள்.

கடந்த 2021-2022 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் சென்னை கொளத்தூரில் அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் கடந்த 2.11.2021 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இக்கல்லூரியில் பி.காம்(பொது), பிபிஏ, பிசிஏ, பி.எஸ்.சி(கணினி அறிவியல்) ஆகிய நான்கு பாடப்பிரிவுகளுடன் முதலாமாண்டு 220 மாணவ, மாணவிகள் இக்கல்லூரியில் கல்வி கற்று வருகின்றன. முதல் பருவத்தேர்வு பிப்ரவரி 2022 ல் நடைபெற்றது.  

தற்போது இரண்டாம் பருவத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 2022 - 2023 கல்வி ஆண்டில் மேற்கூறிய நான்கு பாடப்பிரிவுகளுடன் புதியதாக பி.ஏ. (சைவ சித்தாந்தம்)  பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.  இக்கல்வியாண்டுக்கான மாணவ, மாணவியர்களுக்கான சேர்க்கை முடிக்கப்பட்டவுடன் வரும் ஜூலை 2022 ல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளன. விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி நாள்:05.07.2022 வரை அளிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன் இ.ஆ.ப,, இணை ஆணையர் திருமதி.காவேரி, கல்லூரி தலைமை ஆசிரியர் திரு.வி.ஜெ.சக்கரவர்த்தி  உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags : Minister ,Sekarbabu ,Kabaliswarar College of Arts and Sciences , Minister Sekarbabu presented applications for admission in Kabaliswarar College of Arts and Sciences.
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...