மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி: சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டு

மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சி மேற்கொள்வதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சரும், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏக்நாத் ஷிண்டே 12 எம்எல்ஏக்களுடம் குஜராத்தில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். இந்த சூழலில் பாரதிய ஜனதா மீது ஆளும் ஆட்சி கவிழ்ப்பு புகாரை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் முன்வைத்துள்ளார்.

2019ம் ஆண்டு சிவசேனா தலைமையில் மகா மெகா சகாதி கூட்டம் அமைக்கப்பட்ட போது ஆட்சியை கவிழ்க்க இதே போன்று பாரதிய ஜனதா முயன்றதாக சஞ்சய் ராவத் குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் அனைவரும் நிபந்தனையின்றி திரும்பி வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

நாங்கள் தேவைப்பட்டால் ஆட்சி அமைப்போம்: பாஜக

இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்யுமா? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அந்த கட்சியின் மூத்த தலைவர் ஆட்சி அமைப்பதற்கான தேவை ஏற்பட்டால் அதுவும் நடக்க சாத்தியம் உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா பாரதிய ஜனதா தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் டெல்லி சென்றுள்ளார். அங்கு தேசிய தலைவர் நட்டா மற்றும் அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது: காங்கிரஸ்

இதற்கிடையில் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆளும் கூட்டணி கட்சிகளான சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: