×

சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் மறியல்: கும்மிடிப்பூண்டி அருகே பரபரப்பு

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த அமரம்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கிராமத்தை ஒட்டி சத்தியவேடு -கவரப்பேட்டை நெடுஞ்சாலை வழியாகத்தான் பூதூர், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபுத்தூர், பூவலம்பேடு, சின்ன புலியூர், நேமள்ளூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநில இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் மற்றும் வேலைக்கு செல்பவர் மற்றும் காய்கறி, உதிரி பாகங்களை ஏற்றிக்கொண்டு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் அமரம்பேடு அருகே சாலைகள் சேதம் அடைந்ததால் வாகன ஓட்டிகள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டனர். மேலும் சாலையை சீரமைக்கவேண்டும் என்று மனு அளித்துள்ளனர். இதையடுத்து சாலை அமைப்பதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டது. இதன்பிறகு வாரக்கணக்கில் சாலையை சீரமைக்காமல் விட்டுவிட்டதால் கிராமத்துக்கு செல்லும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கினர். இந்த நிலையில, அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், இளைஞர்கள் திரண்டுவந்து இன்று காலை கவரப்பேட்டை - சத்தியவேடு  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 


Tags : Kummhippundi , Villagers stir, Gummidipoondi, road repair
× RELATED பைக்கில் கஞ்சா கடத்தல்:2 பேர் கைது