மேற்கூரை விழுந்து மாணவன் காயம் அரசு பள்ளி ஹெச்.எம் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே எஸ்.களபம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. நேற்று 4ம் வகுப்பறையில் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென இடிந்து விழுந்ததில் மாணவன்  பரத்(9) படுகாயமடைந்தான். உடனடியாக மாணவனை  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கறம்பக்குடி ஒன்றிய ஆணையர் நளினி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்செல்வன், கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

 இதையடுத்து கவனக்குறைவாக இருந்த தலைமை ஆசிரியை மகாலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து புதுக்கோட்டை கல்வி மாவட்ட அதிகாரி மஞ்சுளா உத்தரவிட்டுள்ளார். முன்னதாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் பரத்திடம் அமைச்சர் மெய்யநாதன் நலம் விசாரித்தார்.

Related Stories: