×

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் இபிஎஸ்: அதிமுக எம்எல்ஏ பேச்சு

ராணிப்பேட்டை: அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்வாவது உறுதி என அரக்கோணம் எம்எல்ஏ ரவி பேசினார். அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்னை கடந்த சில நாட்களாக பூதாகரமாக வெடித்துள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தருபவர்கள் பகிரங்கமாக பொது இடங்களில் பேசி வருகின்றனர். இதனால் பொதுக்குழு கூடுவதற்கு முன்பே அக்கட்சியில் கோஷ்டி மோதல் அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் நேற்று மாலை நெமிலி பேருந்து நிலையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிமுக மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பரமசிவம், அரக்கோணம் எம்எல்ஏ ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது எம்எல்ஏ ரவி பேசியதாவது:
எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவர் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி. அதிமுகவை எதிர்க்க யாருக்கும் திராணியில்லை. விரைவில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்றார்.

Tags : Leon , EPS, AIADMK MLA, Ravi
× RELATED குளச்சல் அருகே கொட்டும் மழையில் சிறுமியிடம் செயின் பறிப்பு