பெண் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகள் விரைவாக விசாரணை: மாதர் சங்கம் வலியுறுத்தல்

செங்கல்பட்டு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட 13வது மாநாடு செங்கல்பட்டில் நடந்தது. மாவட்ட தலைவர் தமிழரசி தலைமை வகித்தார்.  ஆர்.ராஜலட்சுமி சங்கத்தின் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணை செயலாளர் அனுசுயா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்ட துணை தலைவர் ஜெயந்தி வரவேற்றார்.

மாநாட்டை துவக்கி வைத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுகந்தி பேசினார். மாவட்ட செயலர் கலையரசி வேலை அறிக்கை, மாவட்ட பொருளாளர் ஜெ.ஜோஸ்பின் விஜி வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் கீதா, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகனன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டு நிறைவு செய்து மாநில தலைவர் வாலண்டினா பேசினார். மாநாட்டில், செங்கல்பட்டு மாவட்ட புதிய தலைவராக எஸ்.கலையரசி, செயலாளராக ஜி.ஜெயந்தி, பொருளாளராக ஜெ.ஜோஸ்பின் விஜி  உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

 மேலும் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தை வரைமுறைப்படுத்தி பெண்கள் பெயரில் பட்டா வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக அமல்படுத்தவேண்டும். பெண்கள், பெண் குழந்தைகள் மீதான வன்முறை வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: