நெல்லை: அதிமுகவிற்கு ஒற்றை தலைமையே சரி என பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அ.தி.மு.க. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என வலியுறுத்தியதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தகுதியும் திறமையும் உள்ள ஒருவர் அதிமுக தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் என்றார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது கட்சி விதி என தெரிவித்த நயினார் நாகேந்திரன் எம்.ஜி.ஆர் காலத்திலே இருந்தே சிறப்பு அழைப்பாளர்கள் பொதுக்குழுவில் பங்கேற்று இருப்பதாக கூறினார். அதிமுகவுக்கு திறமைமிக்க ஒரு தலைவன் வேண்டும் என்றும் அதற்க்கு ஒற்றை தலைமை தான் சரி என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.