திருவொற்றியூரில் பூப்பந்தாட்ட போட்டி

திருவொற்றியூர்: சென்னை திருவொற்றியூர் பூந்தோட்ட பள்ளி வளாக விளையாட்டு மைதானத்தில், மாவட்ட அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 17 அணியினர் இரட்டையர்களாக விளையாடினர். கலாநிதி வீராசாமி எம்பி, மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் இறுதி போட்டியை துவக்கி வைத்தனர். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு சுழல் கோப்பை, பரிசு தொகையை கே.பி.சங்கர் எம்எல்ஏ வழங்கினார்.

‘’தமிழக அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் பூப்பந்தாட்ட போட்டி சேர்க்கப்பட வில்லை. திறமையான விளையாட்டு வீரர்கள் நேரடியாக விளையாட்டு ஒதுக்கீட்டில் பணியில் சேர்வது போல் ஒன்றிய, மாநில அரசுகள் விதிகளை திருத்தவேண்டும்’’ என்று விளையாட்டு வீரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ‘’முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்துச்செல்வதாக எம்பி, எம்எல்ஏ ஆகியோர் தெரிவித்தனர்.

முன்னதாக பூப்பந்தாட்ட கழக நிர்வாகிகள் எழிலரசன், கோட்டீஸ்வரன், சுப்ரமணி, நந்தா, திமுக நிர்வாகிகள் முத்தையா, ஆர்.சி.ஆசைத்தம்பி, சைலஸ், எம்.வி.குமார், குமரேசன், உமாபதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: