செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி பள்ளியில் பேன், டியூப்லைட்டுகள் உடைப்பு-மர்ம ஆசாமிகள் அட்டூழியம்

செய்யாறு : செய்யாறு கிரிதரன்பேட்டை நகராட்சி பள்ளி வகுப்பறையில் உள்ள பேன், டியூப்லைட்டுகளை உடைத்து சேதப்படுத்திய மர்ம ஆசாமிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.செய்யாறு கிரிதரன்பேட்டையில் நகராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் விடுமுறை நாட்களில, சில சமூக விரோதிகள் பின்பக்க மதில்சுவர் மேல் ஏறி குதித்து உள்ளே வந்து மது அருந்துகின்றனர். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் பலமுறை எச்சரித்தும், போலீசாருக்கு தகவல் கொடுத்தும் விரட்டி அடிப்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், சனி மற்றும் ஞாயிறு விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளியை திறந்தபோது, வகுப்பறையில் உள்ள சீலிங் பேன் மற்றும் டியூட்லைட்டுகளை உடைத்து சேதப்படுத்தப்பட்டு இருந்தது. யாரோன மர்ம ஆசாமிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே வந்து அட்டூழியம் செய்துள்ளனர்.இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், செய்யாறு போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: