கோவில்பட்டியில் புகையிலை பொருள் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது

கோவில்பட்டி : கோவில்பட்டி  கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார், தெற்கு  திட்டங்குளம் ஊர் எல்லையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது எட்டயபுரம்  பகுதியில் இருந்து பைக்கில் வந்த கண்ணக்கட்டை கிராமத்தை சேர்ந்த  வேல்முருகன் (45) என்பவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவரது  பைக்கில் 3 மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருப்பது  தெரிய வந்தது.

விசாரணையில் தாப்பாத்தி கிராமத்திலுள்ள ராமசாமி  என்பவரது மனைவி சண்முகத்தாயிடம் புகையிலை பொருட்களை வாங்கி வந்ததாக  தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் தாப்பாத்தி சென்று சண்முகத்தாய்  வீட்டில் 5 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலை  பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக கிழக்கு போலீசார் வழக்கு பதிந்து வேல்முருகன், சண்முகத்தாய் ஆகியோரை கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேல்முருகனின் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: