தமிழ்நாட்டில் மின்சாரம் தேவை அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் மின்சாரம் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதற்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டியே தேவை உள்ளதாகவும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானகழகம் தெரிவித்துள்ளது. மின் வாகன உற்பத்தி நிறுவங்கள், தரவு மையங்களுடனான புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நிறுவங்களுக்கு 70 முதல் 75 மெகாவாட்டுக்கு குறையாமல் மின்சாரம் வழங்க வேண்டும்.

மின் வாகன உற்பத்தி நிறுவங்கள் மற்றும் தரவு மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கினால்  மின் தேவை அதிகரிக்கும் என்றும் மொத்த தேவை 19,000 மெகாவாட்டிற்கு குறையாது அல்லது அதற்கும் அதிகமாக மின்தேவை அதிகரிக்கும் என்றும் டேன்ஜெட்கோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

செப்டம்பர் மாதத்திற்குள் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை 3வது அலகில் மின் உற்பத்தி தொடங்கும் என்றும் 2024ம் ஆண்டில் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் திறன் கொண்ட 3 வது அலகு செயல்படத் தொடங்கும் என்றும் அதில் தமிழகத்திக்கு 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உடன்குடியில் மொத்தம் 1,300 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகள், சுமார் இரண்டு ஆண்டுகளில் தயாராகிவிடும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் சூரிய ஒளி மற்றும் காற்றாலை போன்ற புதிய மின்சார ஆதாரங்களை அதிகரிக்கவும் தேவை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories: