பொதுக்குழுவை தள்ளிவைக்குமாறு பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் தெரியாது என்பதா?.. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு வைத்திலிங்கம் கண்டனம்..!

சென்னை: பொதுக்குழுவை தள்ளிவைக்குமாறு பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் தெரியாது என்பதா என பழனிசாமி தரப்புக்கு வைத்திலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுகவில் சிலரது சர்வாதிகார போக்குடன் ஒற்றைத் தலைமையை கொண்டு வர முயற்சி நடப்பதால், அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சார்பில் எடப்பாடிக்கு நேற்று திடீரென கடிதம் எழுதப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும். 30 மாவட்ட செயலாளர்கள் ஓபிஎஸ்சுக்கு ஆதரவு அளிப்பதாக வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். பொதுக் குழுவை தள்ளி வைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் எழுதிய கடிதம் கிடைக்கவில்லை என கூறிய எடப்பாடி தரப்பில் கே.பி. முனுசாமி தெரிவித்திருந்தார்.

மேலும் அதிமுக பொதுக் குழுக் கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதனிடையே அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இன்று 8வது நாளாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஈபிஎஸ் வீட்டிற்கு அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரை வருகை தந்தார். வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், எம்.பி.தர்மர் ஆகியோர் ஓபிஎஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து இணை ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். பொதுக்குழுவை தள்ளிவைக்குமாறு பன்னீர்செல்வம் எழுதிய கடிதம் தெரியாது என்பதா என கண்டனம் தெரிவித்தார்.

கே.பி.முனுசாமி பேட்டி மூலம் அதிமுக தலைமைக் கழகத்துடன் இபிஎஸ் தொடர்பின்றி இருக்கிறார். ஓபிஎஸ் எழுதிய கடிதத்தை தலைமை அலுவலகத்தில் இருக்கும் நிர்வாகி கையெழுத்திட்டு வாங்கியுள்ளார். திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நடக்குமா என்பது நீதிமன்ற உத்தரவுக்கு பிறகே தெரிய வரும் எனவும் கூறினார்.

Related Stories: