அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது.. பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை : எடப்பாடி பழனிசாமி பேச்சு!!

சென்னை : அதிமுகவை சிலர் வீழ்த்த முயல்கின்றனர், அந்த சூழ்ச்சிகளை முறியடிப்போம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை வெடித்துள்ள நிலையில், தகவல் தொழில்நுட்ப அணியினர் மத்தியில் பேசிய அவர், அதிமுக கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதையெல்லாம் முறியடித்து ஐ.டி.பிரிவு துணை கொண்டு எதிர்காலத்தில் அதிமுகவை பலம் பொருந்தியதாக மாற்ற வேண்டும். இதற்கு ஐ.டி.பிரிவின் பங்கு முக்கியம். துணை புரியுங்கள்.அதிமுகவின் நல்ல எதிர்காலத்தை உறுதி செய்ய உங்களுடன் பாடுபடுவேன். அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது.நானே முன்னின்று காத்து நிற்பேன்.பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை, என்றார்.

இவ்வாறு எடப்பாடி பேசி இருந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என அவரது முன்னிலையில் தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் முழக்கமிட்டனர்.தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் முழக்கத்தை ஆமோதிப்பது போல் பழனிசாமி அமைதியாக நிற்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பையும் மீறி, அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான தனித் தீர்மானம் இன்றே இறுதி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம் ஒற்றை தலைமை விவகாரத்தில் சட்டரீதியான முயற்சிகளை மேற்கொள்வது குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Related Stories: