அக்னி வீரர்களுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதரவு

புதுடெல்லி: அக்னி பாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டு ராணுவ சேவை முடித்த பின்னர் அக்னி வீரர்களுக்கு என்ன மாதிரியான வேலைவாய்ப்பு கிடைக்கும் என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், அக்னி வீரர்களுக்கு மகேந்திரா நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா டிவிட்டரில் உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து, நாட்டின் பல முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்கள் அக்னி வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் என்.சந்திரசேகரன், ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, பயோகான் லிமிடெட் தலைவர் கிரண் மஜூம்தர், அப்பல்லோ மருத்துவ குழும இணை நிர்வாக இயக்குநர் சங்கீதா ரெட்டி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related Stories: