×

அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆன்லைன் விண்ணப்பம் அடுத்த மாதம் வெளியீடு: ராணுவம் அறிவிப்பு

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்காக ஆன்லைன் விண்ணப்பம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது. அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி முதல் விமானப்படை ஆன்லைன் விண்ணப்ப பதிவை தொடங்க உள்ளதாக நேற்று முன்தினம் அறிவித்தது. இதைத் தொடர்ந்து, ராணுவம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அக்னிபாதை திட்டத்தின் கீழ் சேர்வதற்கு விரும்பும் அனைவரும் ஆட்சேர்ப்பு இணையத்தில் விண்ணப்பிப்பது கட்டாயமாகும். ஜூலை முதல் ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கும். ராணுவத்தில் அக்னி வீரர்களுக்கென்று பிரத்யேக தரவரிசை அமைக்கப்படும். இது தற்போதுள்ள மற்ற பிரிவுகளில் இருந்து வேறுபட்டதாக இருக்கும்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமாக மருத்துவ பிரிவின் தொழில்நுட்ப பணியாளர்களை தவிர ராணுவத்தில் வழக்கமான கேடரில் ராணுவ வீரர்களின் சேர்க்கையானது 4 ஆண்டுகாலம் அக்னிவீரர்களாக பணி முடித்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 4 ஆண்டுகள் முடிவதற்கு முன் சொந்த கோரிக்கையின் பேரில் அக்னி வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படமாட்டார்கள். விதிவிலக்கான சில சூழல்களில் தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதலுடன் அவர்கள் விடுவிக்கப்படுவார்கள். ஆண்டுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கப்படும். மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் மருத்துவ விடுப்பு வழங்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags : Army , Under the Fire Path project Online application Next month release: Army announcement
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...