காமன்வெல்த் போட்டி இந்திய ஹாக்கி அணி அறிவிப்பு

பெங்களூரு: இங்கிலாந்தில் நடைபெற உள்ள  காமன்வெல்த் போட்டியில்  பங்கேற்கும் இந்திய ஹாக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில்  ஜூலை 28ம் தேதி  காமன்வெல்த் போட்டி தொடங்குகிறது. அதில் விளையாட உள்ள இந்திய ஆடவர் ஹாக்கி அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்தப் பிரிவில்  இங்கிலாந்து, கனடா, வேல்ஸ், கானா அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய ஆடவர் அணியை  நேற்று ஹாக்கி இந்தியா அறிவித்தது. இந்திய அணி இப்போது  புரோ லீக்  ஹாக்கித் தொடருக்காக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

மன்பிரீத் சிங் மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா: மன்பிரீத் (நடுகளம்), ஸ்ரீஜேஷ், கிரிஷன் (கீப்பர்கள்),  வருண்குமார், சுரேந்தர், ஹர்மன்பிரீத், அமீத், ஜுக்ராஜ், ஜர்மன்பிரீத் (தற்காப்பு),  ஹர்திக், விவேக் சாகர், ஷம்ஷேர், ஆகாஷ்தீப்,  நீலகண்ட ஷர்மா (நடுகளம்),  மந்தீப், குர்ஜந்த்,  லலித்குமார், அபிஷேக் (முன்களம்).

Related Stories: