ஜெயம் ரவி ஜோடி நயன்தாரா

சென்னை: தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நயன்தாரா.வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் படங்களை இயக்கியவர் அகமது. இவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, டாப்ஸி ஒரு படத்தில் நடித்து வந்தனர். இந்த படத்துக்கு ஜனகணமன என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. 20 சதவீத படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சில காரணங்களால் இந்த படம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வேறொரு கதையை எழுதியுள்ள அகமது, அதில் ஜெயம் ரவியை நடிக்க வைக்கிறார். ஜனகணமன படத்துக்கு கொடுத்த கால்ஷீட்டை இந்த படத்துக்காக ஜெயம் ரவி ஒதுக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேசியிருந்தார்.

இப்போது முறைப்படி ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து சினிமாவில் நடிக்க நயன்தாரா முடிவு செய்திருந்தார். அதன்படி அவரது திருமணத்துக்கு பிறகு நடிக்க ஒப்புக்கொண்ட படமாக இது இருக்கும். இந்த படத்துக்கு இறைவன் என்ற பெயர் பரிசீலனையில் இருக்கிறது. தற்போது நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தேனிலவுக்கு தாய்லாந்து சென்றுள்ளார். சென்னை திரும்பியதும் ஜெயம் ரவி படத்தில் அவர் நடிப்பார் என கூறப்படுகிறது.

Related Stories: