புகாரை வாபஸ் பெற நடிகர் விஜய் பாபு 1 கோடி பேரம்: பாதிக்கப்பட்ட நடிகை பகீர்

திருவனந்தபுரம்: பலாத்கார புகாரை வாபஸ் பெற நடிகர் விஜய் பாபு ஒரு நண்பர் மூலம் ₹1கோடி தருவதாக கூறினார் என்று பாதிக்கப்பட்ட நடிகை கூறியுள்ளார். படங்களில் நடிக்க கூடுதல் வாய்ப்பு தருவதாக கூறி பிரபல மலையாள சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் பாபு தன்னை பலாத்காரம் செய்ததாக மலையாள நடிகை ஒருவர் புகார் கூறினார். இதுதொடர்பாக கொச்சி போலீசார் விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர்.   துபாயில் தலைமறைவாக இருந்த இவர் கடந்த இரு வாரங்களுக்கு முன் கேரளா திரும்பினார். பலாத்கார வழக்கில் விஜய்பாபு தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு கேரள உயர்நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை கூறியது: விஜய் பாபுவின் படத்தில் நாயகியாக நடித்ததற்கு எனக்கு வெறும் ₹20 ஆயிரம் மட்டுமே சம்பளமாக தந்தார். ஆனால் இப்போது பலாத்கார புகாரை வாபஸ் பெறுவதற்காக ஒரு நண்பர் மூலம் எனக்கு ₹1கோடி தருவதாக கூறியுள்ளார்.  என்னுடைய வாழ்க்கையை சீரழித்த அவர் தற்போது எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் என்னை மட்டும் சமூகம் வேட்டையாடுகிறது. நான் புகார் கொடுக்கப் போவது தெரிந்தால் அதிலிருந்து என்னை பின்வாங்க வைக்க பலர் முயற்சித்திருப்பார்கள். அதனால்தான் நான் என்னுடைய வீட்டினருக்கே கூட தெரியாமல் புகார் கொடுத்தேன். எந்தக் காரணம் கொண்டும் நான் புகாரை வாபஸ் பெறப்போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: