விநியோகஸ்தர் சங்க தலைவராக கே.ராஜன் தேர்வு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இதில் கே.ராஜன் தலைமையிலான அணியினர் பெரும்பான்மையான பதவிகளுக்கு வெற்றி பெற்றனர். தலைவராக கே.ராஜன் வெற்றி பெற்றார். செயலாளராக கே.காளையப்பன், துணை தலைவராக எஸ்.நந்தகோபால், பொருளாளராக பி.முரளி, இணை செயலாளராக சாய் என்கிற சாய்பாபா ஆகியோர் தேர்வு பெற்றனர்.

மெட்ரோ ஜெயக்குமார், கிருஷ்ணன், சந்திரன், பிரபுராம் பிரசாத், தியாகு, பன்னீர்செல்வம், மனோகர், சொக்கலிங்கம், ஆனந்தன், சுதாகர், கிருஷ்ணமூர்த்தி, ராஜா ரகீம், குரோம்பேட்டை பாபு, ஏ.ஜி.ரகுபதி, கருணாகரன், நானி செல்வம் ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் ஆனார்கள்.

Related Stories: