×

மணலி மாநகராட்சி ஆரம்ப பள்ளி வகுப்பறையில் மழைநீர் கசிவால் 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

திருவொற்றியூர்:  மணலி பாடசாலை தெருவில் சென்னை மாநகராட்சியின்  ஆரம்பப் பள்ளி உள்ளது. 1932 ஆண்டு துவங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது ஒன்று  முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளியில் 12 கட்டிடங்களும் 19 வகுப்பறைகளும் உள்ளன. இதில் பெரும்பாலான  கட்டிடங்கள் 25 ஆண்டுகள் பழமையானது.  இதனால் இந்த பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு  ₹9 கோடி செலவில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்ட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. இந்த நிலையில் கோடை விடுமுறை இந்நிலையில், நேற்று அதிகாலை பெய்த மழையால் பள்ளியின் பல வகுப்பறையில் மழைநீர் கசிந்தது. பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி நேற்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியர்கள் அனைவரும் பெற்றோர்களின் பாதுகாப்புடன் வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இதனிடையே வட்டார கல்வி அலுவலர் பால்சுதாகர் மற்றும் அதிகாரிகள் பள்ளியை பார்வையிட்டு, பள்ளியில் தற்காலிகமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஆலோசித்தனர். இதன் காரணமாக மேலும் இரண்டு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை விட ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.   இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், மாவட்டத்திலேயே 20 பட்டதாரி ஆசிரியர்கள் மூலம் ஆங்கில வழிக்கல்வி, ஸ்மார்ட் வகுப்பு உள்ளிட்ட அம்சங்களுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இந்த பழைய பள்ளி கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடத்தை கட்டித்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Manali ,Corporation ,Primary School , Manali Corporation Primary School Rainwater leakage in the classroom 3 days holiday notice
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்