×

ஜமீன் கொரட்டூரில் 11 செ.மீ. மழை: பூந்தமல்லியில் 9 சென்டிமீட்டர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில் அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 11 சென்டிமீட்டர் மழையும், பூந்தமல்லியில் 9 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்தது.அந்த வகையில் கும்மிடிப்பூண்டியில் 53 மில்லி மீட்டர் மழையும், பள்ளிப்பட்டில் 9 மில்லி மீட்டர் மழையும், ஆர்.கே.பேட்டையில் 49 மில்லி மீட்டர் மழையும், சோழவரத்தில் 47 மில்லி மீட்டர் மழையும். பொன்னேரியில் 51 மில்லி மீட்டர் மழையும் செங்குன்றத்தில் 37மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மேலும் ஜமீன் கொரட்டூரில் 110 மில்லி மீட்டர் மழையும், பூந்தமல்லியில் 92 மில்லி மீட்டர் மழையும், திருத்தணியில் 62 மில்லி மீட்டர் மழையும், திருவாலங்காட்டில் 76 மில்லி மீட்டர் மழையும், பூண்டியில் 46 மில்லி மீட்டர் மழையும், தாமரை பக்கத்தில் 14 மில்லி மீட்டர் மழையும், திருவள்ளூரில் 55 மில்லி மீட்டர் மழையும், ஊத்துக்கோட்டையில் 80 மில்லி மீட்டர் மழையும்,  ஆவடியில் 59 மில்லி மீட்டர் மழையும் என ஆக மொத்தம் 840 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் 56 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக ஜமீன் கொரட்டூரில் 11 சென்டிமீட்டர் மழையும், பூந்தமல்லியில் 9 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

Tags : Zameen ,Poonamallee , 11 cm in Zameen Korattur. Rain: In Poonamallee 9 cm
× RELATED மகா காலபைரவர் கோயிலில் சிறப்பு யாகம்,...