அக்னி பாதை திட்டத்திற்கு எதிர்ப்பு ரயில் நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு

ஆவடி: அக்னிபாதை திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஆவடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் அக்னி பாதை திட்டத்தின் கீழ் 4 ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தொடர்ந்து, 4 ஆண்டுகளுக்கு பின் 25 சதவீதம் பேர் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் 21 வயது முடிந்தவர்கள் ராணுவத்தில் சேரமுடியாதா, கல்வித்தகுதி பாதிக்கப்படாதா என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இந்நிலையில், அக்னி பாதை திட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் அம்பத்தூர், திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆவடி, பட்டாபிராம், இந்துக்கல்லூரி, நெமிலிச்சேரி மற்றும் திருநின்றவூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் வன்முறை சம்பவங்கள் நிகழாத அளவுக்கு  தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அவர்களோடு சேர்ந்து மாவட்ட போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: