காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் காலி பதவி இடங்களுக்கு வேட்புமனு தாக்கல் தொடக்கம்: தேர்தல் அட்டவணை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் ஏற்பட்டுள்ள காலி பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று துவங்கியது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.2022 வரை ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கு, 9.7.2022 அன்று தற்செயல் தேர்தல்களை நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு எடுத்தது. இதற்கான, அறிவிப்பை நேற்று வெளியிட்டதுடன் வேட்பு மனு தாக்கல் செய்யவும் அனுமதியளித்துள்ளது. இதற்கான, வாக்குப்பதிவு வரும் 9.7.2022 காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 12.7.2022ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.காலியிட விவரங்கள்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு. உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனுமந்ததண்டலம் வார்டு 2, 6. கருவேப்பபூண்டி ஊராட்சி வார்டு 3, 3, பெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் சிவபுரம் ஊராட்சி வார்டு 5, காஞ்சிபுரம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியிடங்கள் கட்சி அடிப்படையிலும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் காலியிடங்கள் கட்சி அடிப்படை அல்லாமலும் தேர்தல்கள் நடைபெறும்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3 அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகளும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2 பெண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும், 2 ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 7 வாக்குச்சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு வாக்குச் சீட்டுகளும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு வாக்குச் சீட்டுகளும் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படும்.

நடத்தை விதிகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் தொடர்புடைய மண்டல முழுமைக்கும் நடத்தை விதிகள் பொருந்தும். கிராம வார்டு உறுப்பினர் தேர்தல் தொடர்புடைய கிராம ஊராட்சி முழுமைக்கும் பொருந்தும். மாதிரி நடத்தை விதி தொகுப்பானது, தேர்தல் அறிவிக்கப்படும் நாள் முதல் தேர்தல் நடைமுறைகள் முடிவு பெறும் நாளான 14-7-2022 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: