புராதன சின்னங்களை கண்டு ரசித்த ஒன்றிய அமைச்சர்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் புராதன சின்னங்களை  சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒன்றிய அமைச்சர் நேற்று கண்டு ரசித்தார். மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இங்கு, தினமும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.  இங்குள்ள புராதன சின்னங்களை கண்டு ரசித்து செல்பி மற்றும் குழுப் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

இந்நிலையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒன்றிய அமைச்சர் நாராயணசாமி நேற்று மாலை மாமல்லபுரம் வந்தார்.  புராதன சின்னங்களை கண்டு ரசித்தார். பின்னர்,  புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதனை தொடர்ந்து, கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் ஆகியவற்றையும் சுற்றி பார்த்தார். இதற்கு முன்னதாக, கலங்கரை விளக்கம் அருகே ஒன்றிய கப்பல் போக்குவரத்து துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

Related Stories: