சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலை விரிவாக்க பணி வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்: அமைச்சர் எ.வ.வேலுவிடம் விக்கிரமராஜா மனு

சென்னை: சென்னையிலிருந்து திருவள்ளூர் வரை நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, அரசு ஆணையிட்டதன் தொடர்ச்சியாக அம்பத்தூர்-ஆவடி பகுதியில் சாலைவிரிவாக்கம் நடைபெற உள்ளதால் சிறு, குறு வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அப்போது விக்கிரமராஜா, வணிகர்களின் பாதிப்புகள் குறித்து அமைச்சரிடம் விரிவாக விளக்கமும் அளித்தார். சந்திப்பின் போது மாநில துணைத்தலைவர் மகாலிங்கம், தென்சென்னை வடக்கு மாவட்டத்தலைவர் ஒய்.எட்வர்ட், முகம்மது மீரான் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். அமைச்சர் ஏ.வ.வேலு கோரிக்கையை பரிசீலனை செய்து சாலை விரிவாக்கம் சம்பந்தமாக ஆய்வு செய்து தீர்வு காண்பதாக உறுதி அளித்துள்ளார் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

Related Stories: