ஜாகீர் கான் சாதனையை முறியடித்த புவனேஸ்வர் குமார்!

பெங்களூரு: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க அணி 5 போட்டிகள் கொண்ட டி20  தொடரில் விளையாடியது. இதில் முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா அணியும், அடுத்த 2 ஆட்டங்களில் இந்திய அணியும் வெற்றி பெற்றதால் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலை அடைந்தது.

இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் கோப்பை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொண்டது. இந்த தொடரின் நாயகனாக இந்திய பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச கிரிக்கெட்டில் புவனேஸ்வர் குமார் பெறும் 4-வது தொடர் நாயகன் விருது இதுவாகும். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதை வென்ற இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை புவனேஷ்வர் குமார் படைத்துள்ளார். இதற்கு முன் ஜாகீர் கான் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 3 தொடர் நாயகன் விருதுகளை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: