மரக்காணம்: மரக்காணத்தில் இரவில் பேருந்தில் தூங்கிய டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் செங்காட்டூர் கிராமத்தை ேசர்ந்தவர் சங்கர் (55). இவர் மரக்காணத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் தனியார் பேருந்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். நேற்றிரவு வழக்கம்போல் செங்கல்பட்டில் இருந்து மரக்காணத்திற்கு இரவு 9 மணிக்கு பேருந்தை ஓட்டி வந்தார். பின்னர் பஸ் நிலையத்தில் பேருந்தை நிறுத்திவிட்டு, அதிலேயே படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை வழக்கம்போல், பேருந்தை எடுப்பதற்கு சங்கர் எழுந்திருக்கவில்லை. நடத்துனர் கண்ணன் அவரை எழுப்பியபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.