மீஞ்சூர் பேரூராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டான அரியன்வாயல் பகுதியில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு திட்டத்தின்கீழ் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமை பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் பங்கேற்று துவக்கி வைத்தார்.

இம்முகாமில் மக்கள் நலப்பணிகள் துறை துணை இயக்குநர் டாக்டர் ஜவஹர்லால் வழிகாட்டுதலில், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம், கண், பல் சிகிச்சை, கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, சித்தா, யுனானி மற்றும் பால்வினை நோய்கள், சளி, இருமல், தொண்டை மற்றும் இசிஜி பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 250க்கும் மேற்பட்டோர் பரிசோதனைகளுடன் மருந்து, மாத்திரைகள்  பெற்று பயனடைந்தனர். முன்னதாக, அரியன்வாயல் அரசு நடுநிலை பள்ளியில் 2 புதிய கழிவறைகள் கட்டுவதற்கு துரை சந்திரசேகர் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். இதில் வார்டு உறுப்பினர் அபுபக்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: