×

வேலூரில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்: பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என ஆட்சியர் உத்தரவு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக  அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பல்வேறு கட்டுப்பாடு நெறிமுறைகளை அமல்படுத்தினார். வேலூரில் நேற்று ஒரு நாளில் மட்டும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் நேற்றைய தினம் 2 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், தற்போது 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது. எனவே, இதனை கருத்தில் கொண்ட அம்மாவட்ட ஆட்சியர், தொற்று மேலும் பரவாமல் இருக்க மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் கட்டாயம் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், வணிக வளாகங்களில் குளிர்சாதன கருவிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். பொது இடங்களில் இரு நபருக்கு இடையே 6 அடி இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். வணிக வளாகங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் நுழையும்போது கிருமி நாசினி தெளிக்க வேண்டும். அதேபோல் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். கொரோனா பரவலை தடுக்க திருமண மண்டபங்களில் 100 பேர் மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்இறப்பு நிகழ்ச்சியில் 50 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தவிர, மாவட்டத்தில் உள்ள அனைவரும் முதல் தவணை மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அதேபோல் முன்கள பணியாளர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், லேசான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவேண்டும், தொற்றின் தீவிரம் அதிகரித்த பின் மருத்துவமனையை அணுக வேண்டாம் என கூறிய ஆட்சியர், பொதுமக்களுக்கு அறிவிப்பையும், அறிவுரைகளையும் வழங்கினார்.    


Tags : Vellore , Vellore, corona control, public space, mask, collector
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...