புல்வாமாவில் இன்று காலை தீவிரவாதி பலி; 18 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை.!

புல்வாமா: புல்வாமாவில் இன்று காலை ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், கடந்த 18 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 18 மணி நேரத்தில் நடந்த 3 என்கவுன்டர் சம்பவங்களில் 7 தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். லோலாப் குப்வாரா பகுதியில் நடந்த என்கவுன்டரில் மொத்தம் 4 லஷ்கர் தீவிரவாதிகளும், டிஹெச் போரா குல்காம் என்கவுன்டரில் 2 ஜெய்ஷ் தீவிரவாதிகளும், சத்போரா புல்வாமா என்கவுண்டரில் ஒரு லஷ்கர் தீவிரவாதியும் கொல்லப்பட்டான்.

அந்த வகையில் இன்று காலை சத்போரா பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அப்போது என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதுகுறித்து காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்ட பதிவில், ‘புல்வாமா அடுத்த சத்போரா பகுதியில் நடந்த என்கவுன்டர் சம்பவத்தில் தீவிரவாதி ஒருவன் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது அடையாளம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: