கடத்தூரில் ஒரு மூட்டை வெற்றிலை ₹11 ஆயிரத்துக்கு விற்பனை

கடத்தூர் : கடத்தூரில், ஒரு மூட்டை வெற்றிலை ₹11 ஆயிரத்திற்கு விற்பனையானது. கடத்தூர் பகுதியில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். முத்தனூர், அஸ்திகிரியூர், கேத்துரெட்டிபட்டி, அய்யம்பட்டி, சில்லாரஅள்ளி, சிந்தல்பாடி, கோம்பை மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் வெற்றிலையை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

நேற்று நடந்த சந்தையில், 80 கட்டுகள் விற்பனைக்கு வந்தன. இதில் 108 (கவுளி) கட்டு கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ₹11 ஆயிரத்திற்கு விற்பனையானது. மொத்தம் ₹8 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்துள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்ட வியாபாரிகள் வெற்றிலை வாங்கிச் சென்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் வெற்றிலை நல்ல விளைச்சல் கொடுத்துள்ளது.

Related Stories: