ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு எதிரொலி!: நிலச்சரிவில் சிக்கி லாரி ஓட்டுநர் உயிரிழப்பு..பல வீடுகள் சேதம்..!!

பூஞ்ச்: ஜம்மு காஷ்மீரில் மேகவெடிப்பு எதிரொலியாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. பூஞ்ச் மாவட்டத்தின் மாண்டி பகுதியில் திடீரென நேற்று மேகவெடிப்பு நிகழ்ந்து பெருமழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து பேருந்து நிலையம் அருகே சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மண், அப்பகுதியில் உள்ள கடைகளையும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றையும் மூடியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டார்கள். லாரி மண்ணுக்குள் புதையுண்டு ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பூஞ்ச் மாவட்டத்தில் ஓரிரு மணி நேரத்தில் 16 செ.மீ. மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்தது. மேகங்கள் திரண்டு ஒரே இடத்தில், குறுகிய நேரத்தில் கனமழையாக கொட்டுவது மேகவெடிப்பு எனப்படுகிறது. இதுகுறித்து பூஞ்ச் மாவட்ட அலுவலர் ஷாஷத் லதீஃப் கூறியதாவது, மாண்டி பகுதியில் நேற்று மாலை திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டியது. அப்போது ஏற்பட்ட நிலச்சரிவில் லாரி சிக்கியது. இதில் ஓட்டுநர் உயிரிழந்துவிட்டார். பல்வேறு வீடுகளும் சேதம் அடைந்துள்ளன என கூறினார்.

Related Stories: