தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது. சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜமீன்கொரட்டூர் -11, ஆலந்தூர், பூந்தமல்லியில் தலா 9 செ.மீ. மழையும், நுங்கம்பாக்கம், ஊத்துக்கோட்டையில் தலா 8 செ.மீ. மழையும் பொழிந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 13, தரமணியில் 11, காட்டுப்பாக்கத்தில் 9 செ.மீ. மழைப்பதிவாகியுள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும். சென்னையில் மிதமான மழை பெய்யலாம் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

Related Stories: