×

கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட வலது கரையை நிரந்தரமாக சீரமைக்க கோரிக்கை

கொள்ளிடம் : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு நேராகச் சென்று வலது கரையில் மோதி திரும்பிச் செல்கிறது. அந்த இடத்தில் முன்பு அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவர் கடந்த 2020ம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கால் உடைந்து ஆற்றுக்குள் விழுந்தது. அதனைத் தொடர்ந்து ஆற்றின் வலது கரை உடைப்பு ஏற்பட்டது. உரிய நேரத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பனை மரங்கள் மண் மற்றும் பாறாங்கற்களை கொண்டு அடைக்கும் முயற்சியில் ஈடுபட்டு கரை தற்காலிகமாக அடக்கப்பட்டது. இதனால் விபத்து தவிர்க்கப்பட்டது. அதன் பிறகு நிரந்தரமாக கரையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்ல.

மழைக்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் அதிகமாக வெளியேற்றும் போதும், அதிக மழை பெய்யும்போதும் பல பகுதியில் உள்ள வாய்க்கால்களில இருந்து வெளியேற்றப்படும் நீர் கொள்ளிடம் ஆற்றில் திருப்பி விடப்படும்போது அளக்குடி கிராமத்தில் எளிதில் கரை உடைய வாய்ப்பு உள்ளது. வரும் மழைக்காலத்தில் ஆற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அளக்குடி கிராமத்தில் தற்காலிகமாக சரி செய்யப்பட்ட கொள்ளிடம் ஆற்றின் வலது கரை பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு உடையும் அபாய நிலை ஏற்படும்.

அப்படி உடைப்பு ஏற்பட்டால் அப்பகுதியில் உள்ள பல கிராமங்கள் பெரும் அழிவை சந்திக்கும் சூழ்நிலை உருவாகும். நிலை உள்ளது. எனவே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை நிரந்தரமாக கான்கிரீட் சுவர் அமைத்து சரி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Alakudi ,Kodu , Kollidam: In Mayiladuthurai district near Kollidam, in Alakkudi village, the Kollidam river goes straight and collides with the right bank.
× RELATED கொள்ளிடம் அருகே அதிகாரிகள்...