இலங்கைக்கு கடத்தி சென்ற ரூ.5 கோடி கஞ்சா சிக்கியது

ராமேஸ்வரம் : மன்னார் கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான கஞ்சா பார்சல்களை இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். கரையோரத்திலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சிலாபம், உடப்புவ கடற்கரை பகுதியில் இவர்கள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது உடப்புவ பெரியபாடு கடற்கரையில் 173 கஞ்சா பார்சல்கள் கரை ஒதுங்கி கிடந்தது. இவற்றில் பெரும்பாலானவை தண்ணீரில் நனைந்து ஈரமாக இருந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த எடை 500 கிலோ இருக்கும் என இலங்கை கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையில் இதன் மதிப்பு ரூ.5 கோடியாகும்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா பார்சல்கள், மன்னார் வளைகுடா கடல் வழியாக படகில் கடத்தி கொண்டு வரும்போது, இலங்கை கடற்படை ரோந்து கப்பல்களை பார்த்ததும் கடத்தல் நபர்கள் பார்சல்களை கடலில் போட்டு விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கடற்படையினர் தெரிவித்தனர். கஞ்சா பார்சல்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டதால் தமிழகத்தின் தூத்துக்குடி கடலோர பகுதிகள் அல்லது கேரளா கடலோர பகுதியில் இருந்து படகில் கடத்தி வரப்பட்டிருக்கலாம் என கடற்படை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: