நாளை சர்வதேச யோகா தினம் யோகா தினமும் செஞ்சா நோய்கள் பறக்கும் பஞ்சா

திருவில்லிபுத்தூர் : நோயின்றி ஆரோக்கியமாக வாழ அனைவரும் யோகா செய்யவேண்டும். இதுவரை யோகா பயிற்சி எடுக்காதவர்கள் கூட, நாளை சர்வதேச யோகா தினத்தில் இருந்து பயிற்சியைத் துவக்கவேண்டும் என பெண் யோகா பயிற்சியாளர் வலியுறுத்தியுள்ளார்.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ரெங்கநாதபுரம் தெருவைச் சேர்ந்தவர் பூமதி (42). சிறு வயது முதலே யோகா ஆர்வம் உள்ள இவர், யோகாவில் முதுகலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். யோகா கலையை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேடி வருபவர்களுக்கு இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கிறார். பூமதி கூறுகையில், ‘‘பணம் உள்ளவன் லட்சாதிபதி.

நோய் இல்லாதவன் கோடீஸ்வரன் என்ற பழமொழி கிராமப்பகுதியில் உண்டு. இன்றைய சூழலில் நோயில்லாமல் வாழ்வது வரப்பிரசாதம். மனிதனுக்கு வரக்கூடிய நோய்களை விரட்டியடிக்கும் சக்தி யோகாவுக்கு உள்ளது. தினமும் அரை மணிநேரம் யோகா செய்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். மன வலிமை கிடைக்கும். பரபரப்பான இந்த உலகத்தில் நோயில்லாமல் தைரியமாக மன நிம்மதியுடன் வாழ, ஆண், பெண் அனைவரும் யோகா செய்ய வேண்டும். இதுவரை யோகா பயிற்சி செய்யாதவர்கள் கூட, ஜூன் 21 (நாளை) சர்வதேச யோகா தினத்தன்று கட்டாயம் யோகா பயிற்சியைத் துவக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: