×

வங்கதேசத்தில் கனமழை... 122 ஆண்டுகள் கண்டிராத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு: 59 பேர் பலி;

டாக்கா : வங்கதேசத்தில் ஒரு வாரமாக கொட்டி வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் வடக்கிழக்கு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக இடைவிடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பெருக்கெடுத்த வெள்ளம் எதிரொலியாக பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. கடந்த 122 ஆண்டுகளில் கண்டிராத அளவுக்கு மிகவும் மோசமான வெள்ளப்பாதிப்பை வங்கதேசம் எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சில்ஹெட் மற்றும் சுனம்கஞ்ச் ஆகிய மாவட்டங்களை மழை, வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பிற பகுதிகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. சுர்மா ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் சில்ஹெட் நகரில் உள்ள கரையோர வீடுகள் அனைத்தும் மூழ்கிவிட்டன. உணவு, குடிநீர் இன்றி அவதிக்கு ஆளாகி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளன.சில்ஹெட் சர்வதேச விமான நிலையத்தையும் மழைநீர் வியாபித்து இருப்பதால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தால் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை சற்று தணிந்துள்ளதால் மீட்புப் மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக மழை, வெள்ளத்திற்கு 59 பேர் பலியாகி உள்ளதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.


Tags : Bangladesh , Bangladesh, heavy rains, floods
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...