பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழப்பு; மாநில அரசு தகவல்

பீகார்: பீகார் மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கி 17 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதீஷ்குமார் அறிவித்துள்ளார். பாகல்பூர் மாவட்டத்தில் 6 பேரும், வைஷாலி மாவட்டத்தில் 3 பேரும் பங்கா மற்றும் ககாரியா மாவட்டத்தில் தலா 2 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

முங்கேர், கடிஹர், மதேபுரா மற்றும் சஹர்சா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்நிலையில், பீகார் மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: